மன்னார் மறை மாவட்ட ஆயர் தலைமையில் விசேட நத்தார் திருப்பலி
நத்தார் தின திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் இன்று காலை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
சுகாதார நடை முறைகளைப் பின்பற்றி முகக்கவசங்கள் அணிந்த வண்ணம் ஒரு தொகுதி கிறிஸ்தவ மக்கள் திருப்பலியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
அதே நேரத்தில் மக்களின் ஆன்மிக நலனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு பங்குகளிலும் வெவ்வேறு நேரங்களில் குறிப்பிட்ட அளவு மக்களின் பங்கு பற்றுதலுடன்,திருப்பலிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 11 மணி நேரம் முன்

ராகு பெயர்ச்சியால் சனி பகவானின் கட்டுக்குள் சிக்கப் போகும் ராசிக்காரர்கள்! இன்றைய ராசிப்பலன் Manithan
