மலையகத்தில் சிறப்பாக இடம்பெற்ற நத்தார் விசேட ஆராதனை நிகழ்வுகள்!
இயேசு பிரானின் பிறப்பைக் கொண்டாடப்படும் நத்தார் பண்டிகை முன்னிட்டு நாடெங்கும் உள்ள தேவாலயங்களில் விசேட வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெற்றன.
அதன்படி, நுவரெலியா புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயம் ( St. Francis Xavier's church Nuwara eliya ) மற்றும் ஹட்டன் ஸ்ரீ கிராஸ் தேவாலயம் (Hatton Holy Cross Church) இல் நத்தார் ஆராதனை நடைபெற்றது.
விசேட திருப்பலி
இதனடிப்படையில், இரவு 12 மணியிலிருந்து வழிபாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. பாலன் இயேசுவின் பிறப்புத் தினமான நத்தார் தின விசேட திருப்பலி நள்ளிரவு ஒப்புக்கொடுக்கப்பட்டது.

குறிப்பாக நுவரெலியா புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயத்தில் (24) நள்ளிரவு (25) காலை முதல் மூன்று மொழிகளிலும் கிறிஸ்துமஸ் ஆராதனைகள் இடம்பெற்றன.
மேலும் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை நிறைவின்போது மக்கள் தங்களுக்குள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதையும் காண முடிந்தது. இதன்போது ஆலயங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.
இயேசு பிறப்பினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு கொட்டில் திறக்கப்பட்டு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மலையகத்தில் கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.





சிறகடிக்க ஆசை சீரியலில் புதிய என்ட்ரியால் ஷாக்கில் அண்ணாமலை குடும்பம்... மனோஜ் மாட்டிக்கொண்டாரா? Cineulagam
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri