அநுர தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் எதிர்வரும் 7ஆம் திகதி காலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசின் வரவு - செலவுத் திட்டம் நவம்பர் மாதம் 7ஆம் திகதி நிதி அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் வரவு - செலவுத் திட்ட உரைக்கு அனுமதி பெறுவதற்காக விசேட அமைச்சரவைக் கூட்டம் நடக்கவுள்ளது. ஜனாதிபதியின் வரவு - செலவுத் திட்ட உரை 2ஆம் வாசிப்பாகக் கருதப்படும்.
மொத்த செலவீனம்
2ஆம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெறும். 14ஆம் திகதி மாலை 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நவம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகும். வரவு - செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெறும்.
தேசிய மக்கள் சக்தி அரசின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் அரச மொத்த செலவீனமாக 4 ஆயிரத்து 434 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam