மகாத்மாவின் மறுபக்கம்.. வரலாற்றில் மறைக்கப்பட்ட திடுக்கிடும் உண்மைகள்
மகாத்மா காந்தி என்றாலே, இந்தியாவையும் கடந்து உலகம் முழுவதும் பலரால் போற்றப்படுவதும் அதீத மரியாதை செலுத்தப்படுவதும் நாம் அனைவரும் அறிந்தது தான்.
ஆனால், இந்தியாவின் "தேசப்பிதா" என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி, இளம் பெண்களை தன்னுடன் ஒரே படுக்கையில் உறங்க வைத்து ஒரு சர்ச்சைக்குரிய மற்றும் விசித்திரமான சோதனையை நடத்தியுள்ளார் என்ற விடயம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எப்படியும் இவ்வுலகில் எல்லோருக்கும் தெரிந்த வரலாறையும் தாண்டி ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மை என்று ஓரிரு விடயங்கள் இருப்பது இயல்பு என்பதை போலவே, நாம் யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத பல உண்மைகள் மகாத்மா காந்தியின் வரலாற்றில் பதிவிடப்படவில்லை என கூறப்படுகின்றது.
ஆடைகள் களைந்த நிலை..
1946ஆம் ஆண்டு, காந்தி, இளம் பெண்களை வைத்து விசித்திரமான பரிசோதனையை செய்ததாகவும் அது காந்தி பற்றி நாம் அனைவரும் அறிந்த வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பல தெரிவிக்கின்றன.

அஹிம்சை வழியில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு இந்திய மக்களின் சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த ஒரு மகான் இவ்வாறான ஒரு ஏற்கத்தகாத சோதனையை எதற்காக செய்ய வேண்டும்?
இந்திய வரலாற்றாசிரியர், சுற்றுச்சூழல் ஆர்வலர், எழுத்தாளர் மற்றும் பொது அறிவுஜீவியான ராமச்சந்திர குஹா, காந்தியின் பிரம்மச்சரிய சோதனை குறித்து பல வருடங்கள் ஆய்வுகளை நடத்தி அது பற்றிய கட்டுரையை வெளியிட்ட நூலில் விபரமாக குறிப்பிட்டுள்ளார்.
அது மாத்திரமன்றி, மகாத்மா காந்தியின் பேத்தியான மனு காந்தி தனது சுயவிபர புத்தகத்திலும் குறித்த சோதனை பற்றி எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காந்தியின் நம்பிக்கை
மனு காந்தி, மகாத்மா காந்தியின் வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில் அவரைப் பராமரிப்பவராகவும், காலவரிசை எழுத்தாளராகவும் பணியாற்றியதுடன், 1948 இல் காந்தி படுகொலை செய்யப்பட்டமைக்கு சாட்சியாகவும் இருந்தவர்.

இந்நிலையில், இவ்வாறு பல்வேறு வகையில் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகளின் படி, மகாத்மா காந்தி தனது பிரம்மச்சரிய நிலைப்பாட்டின் ஸ்திரத்தன்மையையும் தன்னுடைய ஆன்மிக ஒழுக்கத்தையும் சோதிப்பதற்காக தனது பேத்திகளான மனு காந்தி, அபா மற்றும் காந்தியின் தனிப்பட்ட வைத்தியர் சுசிலா நாயர் போன்ற தன்னை விட கிட்டத்தட்ட 60 வயது குறைந்த இளம் பெண்களுடன் ஒரே படுக்கையில் உறங்கியதாக கூறப்படுகின்றது.
இந்திய வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, தமது பெரும் ஆய்வின் பலனாக உருவான மகாத்மா காந்தியின் இரு தொகுதி வாழ்க்கை வரலாற்றின் இரண்டாம் தொகுதியை வெளியிட்ட போது, பல ஆண்டுகளாக மேற்கொண்ட இந்தப் பணி குறித்து அவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் உரையாற்றியுள்ளார்.
அப்போது காந்தியின் வாழ்க்கையில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய இந்த நிகழ்வையும் அவர் வெளிப்படையாக எடுத்துரைத்துள்ளார்.
ஆன்மீக ஒழுக்கம்
1944ஆம் ஆண்டு தன் மனைவி கஸ்தூரிபாய் மரணமடைந்த பின், காந்தி தன்னுடைய ஆன்மீக ஒழுக்கத்தைச் சோதிப்பதற்காக தன்னுடைய தனிப்பட்ட வைத்தியர் சுஷிலா நாயர் மற்றும் மருமகள்கள் அபா, மனு போன்ற இளம்பெண்களுடன் ஆடைகள் களைந்த நிலையில் ஒரே படுக்கையில் உறங்கத் தொடங்கினார்.

இது உடலுறவிற்காக அல்ல, மாறாக தன் பிரம்மச்சரிய வாக்கை நிரூபிக்க முயன்ற ஆன்மீக சோதனை என காந்தி கருதியதாக வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தன்னை கட்டுப்படுத்துவதால் தன் உள்ளத்திலிருந்த பாவங்களை நீக்கி, இந்தியாவில் நிலவிய இந்து - முஸ்லிம் வன்முறைகளையும் தணிக்க முடியும் என மகாத்மா காந்தி முழுமையாக நம்பியுள்ளார். தன் “நீதி குறைகள்” நாட்டின் கலகங்களோடு தொடர்புடையவை என்ற நம்பிக்கையில் அவர் இருந்துள்ளார்.
எனவே, தனது உணர்வுகள் தூண்டப்படுவதை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதன் மூலம் தனது பிரம்மச்சரியத்தின் முழுமையான பலனை பெற முடியும் எனவும் அதன் மூலம் வன்முறை சம்பவங்களும் நிறுத்தப்படும் எனவும் காந்தி நம்பிக்கை வைத்திருந்தார்.
வரலாற்றில் இல்லை..
இந்நிலையில், காந்தியுடன் அப்போது இருந்த பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரிடம் இருந்து விலகியதாகவும் குறித்த சோதனை வெறும் இரு வாரங்களுக்கு மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், காந்தியுடன் மிக நெருங்கிய நபராக இருந்த ஜவர்கலால் நேரு, தனக்கு காந்தியின் இந்நடவடிக்கை “இயற்கைக்கு முரணானதும் அதிர்ச்சிகரமானதும்” எனத் தோன்றுகின்றது என கூறியுள்ளார்.
இச்செயல்கள் பலரையும் அதிர்ச்சியடையச் செய்ததாகவும் காந்தியின் சில உதவியாளர்கள் வேலையை விட்டுச் சென்ற போதும் கூட இந்திய ஊடகங்கள் மௌனமாக இருந்தன என்று குஹா குறிப்பிட்டுள்ளார்.
எது எவ்வாறாக இருப்பினும், காந்தி தொடர்பான வரலாற்றில் இந்த சோதனை பற்றிய தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை. அத்துடன், காந்தியின் இச்சோதனை குறித்து அக்காலத்தில் இந்திய அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
- இக்கட்டுரையானது, இணையத்தில் உள்ள பல தரவுகளை மொழிபெயர்த்து மற்றும் தொகுத்து உருவாக்கப்பட்டது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Sajithra அவரால் எழுதப்பட்டு, 28 October, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.