தடை செய்யப்படும் நடவடிக்கைகள் - பொது மக்களுக்கு அமைச்சரின் விசேட அறிவிப்பு
வெசாக் மத வழிபாட்டின் போது பொருத்தமற்ற நடவடிக்கைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் ஏற்பாடு செய்யப்படும் வெசாக் வலயங்கள் மற்றும் தான நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து விசேட திட்டங்களையும் முறைப்படுத்துவதற்காக அரசாங்கம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18.05.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அனுமதியில்லை
அவர் மேலும் தெரிவிக்கையில், வெசாக் கொண்டாட்டங்களின் போது 'ஹெட்-பேங்கிங்' (head-banging) இசை நிகழ்வுகள் மற்றும் 'பயமுறுத்தும் வீடுகள்' (haunted houses) போன்றவற்றை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

அத்துடன், தானசாலைகளை ஏற்பாடு செய்பவர்கள் பௌத்த கொடிகளுக்குப் பதிலாக மஞ்சள் நிறக் கொடிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அகில இலங்கை சாசன பாதுகாப்பு சபைகளின் மகாசங்கத்தினர் மற்றும் அரச நிறுவனங்கள் இணைந்து இந்த ஒழுங்குமுறைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்.
தானசாலைகள், வெசாக் அலங்காரங்கள், வீதிப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து விசேட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் படையினருடனான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பொருத்தமற்ற அலங்காரங்கள் மற்றும் காட்சிப்படுத்தல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 21 மணி நேரம் முன்
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam