பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு! அரசாங்கம் எடுத்துள்ள முடிவு
பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கான விசேட கொடுப்பனவொன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வறுமையை ஒழிக்கும் வேலைத் திட்டம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொதுத் தேர்தலின் பின்னர் 25 பேர் கொண்ட முறையான அமைச்சரவை ஒன்றை தேசிய மக்கள் சக்தி உருவாக்கும்.
கிராமப் புற மக்களின் வறுமையை தீர்க்க விசேட திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. இது பிரதேச செயலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.
2025ஆம் ஆண்டு முதல் நாட்டிற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை உள்ளீர்க்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கான விசேட உதவித் தொகை ஒன்றை வழங்கவும் எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan