நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று விசேட உரை!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்த தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
ஜனாதிபதி உரை நிகழ்த்தப்படவுள்ள நேரம் தொடர்பான விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, கொரோனாவின் நிலைமை, நாட்டின் பொருளாதார நிலை மற்றும் நாட்டை முடக்குவதில் உள்ள சிரமங்கள் குறித்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விளக்குவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி, அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து தெளிவூட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் கண்டிக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பிரதான பீடாதிபதிகளை சந்தித்து நாட்டின் நிலைமை குறித்து விளக்கவுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 15 மணி நேரம் முன்
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படாது: புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியின் திட்டம் News Lankasri