நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய விசேட உரை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றியுள்ளார்.
ஜனாதிபதியின் நாட்டு மக்களுக்கான உரை இன்று இரவு 8.30 மணிக்கு ஊடகங்களில் ஒளி, ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது ஜனாதிபதி தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன்,நாட்டின் ஐக்கியம் குறித்தும் அச்சம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும்,உள்நாட்டு விவகாரங்களில் தலையிட எவருக்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முடிவடைவதற்குள், 30 வயதிற்கு மேற்பட்ட 13 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்த நான்கு ஆண்டுகளில் 60,000 நகர வீடுகள், 200,000 கிராமிய வீடுகள், 40,000 தோட்ட மற்றும் வாடகை வீடுகளை அமைக்கத்திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.