நாளை பாடசாலைகளை திறப்பது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு மாவட்டத்தில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் அதிபர்கள் தீர்மானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை திறப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வலயக் கல்வி பணிப்பாளர் அறிவித்துள்ளார். இதன்படி பாடசாலைகளை நாளைய தினம் நடத்துவது குறித்து அதிபர்கள் தீர்மானிக்க உள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அதிபர்கள் பாடசாலை திறப்பது தொடர்பில் தீர்மானங்களை எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீரற்ற காலநிலை நிலவும் மாவட்டங்களில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலயங்களாக நாட்டின் சில பகுதிகளில் கடுமையான மழை பெய்து வரும் நிலையில் கல்வி அமைச்சு இந்த தீாமானத்தை எடுத்துள்ளது.
குறிப்பாக மத்திய மற்றும் சபகரகமுவ மாகாணங்கள் கடும் மழையுடனான காலநிலையினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணித்தியாலங்களில ்கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டியில் 210 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.