சபாநாயகரை சந்தித்த அமெரிக்க தூதுவர்

Parliament of Sri Lanka Mahinda Yapa Abeywardena United States of America United States Embassy in Sri Lanka
By Steephen May 27, 2022 12:08 PM GMT
Report

அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி பொருளாதார நெருக்கடியை வெற்றிக்கொள்ளும் இயலுமை புதிய பிரதமர் உட்பட அரசாங்கத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொண்டு ஜனநாயகத்தை பாதுகாக்கும் அவசியம் குறித்தும் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் சந்தித்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சபாநாயகரை சந்தித்த அமெரிக்க தூதுவர் | Speaker Parliament Us Ambassador

ஜூலி சங்க் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்ட பின்னர் சபாநாயகரை சந்தித்தது இதுவே முதல் முறை. மேலும் இலங்கை - அமெரிக்க நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை முன்னேற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் தூதுவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மேற்கொண்டு வரும் பணிகளை பாராட்டியுள்ள தூதுவர், நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

சபாநாயகரை சந்தித்த அமெரிக்க தூதுவர் | Speaker Parliament Us Ambassador

அதேவேளை இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்த அமெரிக்க தொடர்ந்தும் வழங்கி வரும் பலம் தொடர்பில் சபாநாயகர் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டுள்ளார். இந்த சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்கவும் கலந்துக்கொண்டார்.

சபாநாயகரை சந்தித்த அமெரிக்க தூதுவர் | Speaker Parliament Us Ambassador

மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US