நாடாளுமன்றில் விவாதத்திற்கு வரும் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்
சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்றும் நாளையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், நாளை காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் விவாதம் நடத்தப்பட உள்ளது.
நாடாளுமன்ற பதில் பொதுச் செயலாளர் ஹன்ச அபேரட்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு
நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட நிறைவேற்றம் மற்றும் பொலிஸ் மா அதிபர் நியமனம் ஆகிய சந்தர்ப்பங்களில் சபாநாயகர் பக்கச் சார்பாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எதிர்க்கட்சிகளினால் நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது.

விவாதங்களின் பின்னர் நாளை மாலை நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam