மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அசோக ரன்வெல்ல!
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக சபாநாயகர் ஜகத் விக்ரமசிங்க முழு நாட்டிற்கும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் சபாநாயகரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வெல்ல பாடசாலை விழாவில் பங்கேற்மை குறித்து டி.வி. சானக ஒரு கேள்வியை நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் எழுப்பியிருந்தார்.
பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகளை ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அதிகாரிகளுக்கு அரசாங்கம் அளித்த அறிவுறுத்தல்களை இது கேள்விக்குள்ளாக்குகிறது என தெரிவித்திருந்தார்.
முன்னாள் சபாநாயகர்
அப்போது, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, “அசோக ரன்வெல்ல ஒரு அரசியல் கட்சியின் பிரதிநிதியாக அல்லாமல், நாடாளுமன்றின் பிரதானியாகவே பங்குப்பற்றினார்.
நாடாளுமன்றின் பிரதானி என்பது அரசியல் கட்சிகளுக்கு சார்பற்ற ஒரு பதவிநிலையாகும். இவ்வாறு அசோக ரன்வெல்ல பங்குபற்றியமையில் எந்த சிக்கலும் இல்லை” என்றார்.
எனினும், அசோக ரன்வெல்ல தற்போது முன்னாள் சபாநாயகர் என்றும், நாடாளுமன்றின் பிரதானி அல்ல என்றும் டி.வி. சானக சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
