நாடாளுமன்றத்திற்கு எடுத்து வரப்பட்ட பொதி:பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யும் சபாநாயகர்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்தி, தடைகளை ஏற்படுத்தி சந்தேகத்திற்குரிய பொதி ஒன்றை நாடாளுமன்றத்திற்குள் எடுத்து வந்தம சம்பந்தமான பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளில் வெளியாகும் தகவல்களுக்கு அமைய பொறுத்தமான நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த முடிவை அவைக்கு அறிவிப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு நேற்று பொதி ஒன்றை எடுத்துச் சென்றனர்.
அதனை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என பொலிஸார் கோரியும், அதனை மீறி அவர்கள் அதனை எடுத்துச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது சம்பவம் தொடர்பான நாடாளுமன்றத்தில் இன்று காலை ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட விவாதத்தின் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 2 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri