விண்வெளி ஆய்வில் வியக்க வைக்கும் சாதனையை தனதாக்கிய எலான் மஸ்கின் நிறுவனம்
உலகளாவிய விண்வெளி ஆய்வில் மிகப்பெரும் சாதனையை எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் படைத்துள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய சுப்பர் ஹெவி பூஸ்டர் விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்பியதன் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், தனது ஸ்டார்சிப் யைஹெவி பூஸ்டர் விண்கலம் மீண்டும் ஏவப்பட்ட இடத்திற்கே திரும்பச் செய்து ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போகோசிகாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து நேற்று அக்டோபர் 13 ஆம் திகதியன்று, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தனது 400 அடி உயர ஐந்தாவது ஸ்டார்சிப் விண்கலத்தை சோதனை முயற்சியாக விண்ணில் ஏவியது.'
இந்தநிலையில் விண்ணில் ஏவப்பட்ட 7 நிமிடங்களில் விண்கலத்தில் இருந்த சுப்பர் ஹெவி பூஸ்டர் மீண்டும் ஏவுதளத்திற்கே திரும்பியது.
ஏற்கனவே இதற்கு முன்னர் ஏவப்பட்ட பூஸ்டர் திட்டமிட்டபடி பூமிக்கு திரும்பவில்லை. எனினும் இந்த முறை, மிக துல்லியமான முறையில் புவியீர்ப்பு விசையை எதிர்த்து, 5000 மெட்ரிக் தொன் எடை கொண்ட சுப்பர் ஹெவி பூஸ்டர் விண்கலம் மீண்டும் ஏவுதளத்துக்கே திரும்பியுள்ளது.
இதன்படி பூமிக்கு திரும்பிய ஹெவி பூஸ்டர் விண்கலத்தை "மெக்காஸில்லா" எனப்படும் மிகப்பெரிய லோன்ச்பேட் இயந்திரத்தில் உள்ள 'சொப்ஸ்டிக்ஸ்' எனப்படும் பிரம்மாண்ட கைகளை போன்ற கருவி பிடித்து தரையிறக்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
