தனிமைப்படுத்தல் நிலையங்களில் இடநெருக்கடி! - அரசாங்கம் எடுத்துள்ள அவசர நடவடிக்கை
தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி காரணமாக கொழும்பில் அறிகுறி இல்லாத கொவிட் -19 நோயாளிகளுக்கு அரசாங்கத்தால் நடத்தப்படும் இடைநிலை சிகிச்சை மையங்களாக மாற்றக்கூடிய கைவிடப்பட்ட கட்டிடங்களை அரசாங்கம் தீவிரமாக தேடி வருகின்றது.
கொழும்பில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்படும் நிலையில், கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் (NOCPCO) இந்த அவசர நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து வரும் அறிகுறியற்ற நோயாளிகளுக்கு தற்போதுள்ள இடைநிலை சிகிச்சை மையங்களில் இடம் போதாமல் இருப்பதாக ஆரம்ப சுகாதார, தொற்றுநோயியல் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடிய கட்டிடங்களைக் கண்டுபிடிக்கும் பணியில் கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் ஈடுபட்டுள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 18 மணி நேரம் முன்

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
