பிரித்தானியாவை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம்: போராட்டத்தில் அத்துமீறிய பொதுமக்கள்
பிரித்தானியா (US) - சவுத்போர்ட் (Southport) பகுதியில் இடம்பெற்ற கொடூர கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து டவுனிங் தெருவில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அந்நாட்டு பொலிஸார் கட்டுபடுத்த முற்பட்ட நிலையில் அப்பகுதியில் பாரிய கலவரம் ஏற்பட்டுள்ளது.
சவுத்போர்ட் பகுதியில் கடந்த 30ஆம் திகதி நடந்த கொடூர கத்திக்குத்து சம்பவத்தில் சிறுவர்களுக்கான கோடைகால முகாமில் கலந்து கொண்ட மூன்று சிறுவர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
குறித்த சம்பவத்தில் 8 சிறுவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அதில் 5 பேர் மிகவும் மோசமான உடல்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொலிஸாருடன் மோதல்
இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து வீதிகளில் திரண்ட போராட்டக்காரர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளதுடன் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் டவுனிங் தெருவில் எரிப்புக்களை வீசி போராட்டத்தில் ஈடுப்பட்டமையினால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும், இவ் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான நீதியை பெற்றுத்தருமாறு கோரியே அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் தலைநகரிலும், லெபனான் தலைநகரிலும் இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்கள்! இரண்டு அமைப்புக்களின் தலைவர்கள் படுகொலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
