நெடுஞ்சாலை பகுதியை 10,000 ரூபாவுக்கு குத்தகைக்கு வழங்கிய ராஜபக்ச குடும்பம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் சேவைப் பகுதியை ராஜபக்ச குடும்பத்தினர் 99 ஆண்டுகளுக்கு 10,000 ரூபாவுக்கு குத்தகைக்கு வழங்கியிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ராஜபக்ச குடும்பத்தின் நண்பர்கள் பல அங்கீகரிக்கப்பட்ட சேவைப் பகுதிகளை நிர்மாணிப்பதைத் தடுத்ததாகக் கூறியுள்ளார்.
அத்துடன், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானத்தின் போது பல முரண்பாடுகள் இருந்ததாகவும் பில்லியன் கணக்கான பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
முரண்பாடுகள்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஆரம்பத் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லாத நுழைவுப் புள்ளிகளுடன் இரண்டு பரிமாற்றங்களை நிர்மாணித்ததில் முரண்பாடு இருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தளையில் உள்ள கொடகமவிலிருந்து 05 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கபுடுவா பரிமாற்றம் கொழும்பிற்குச் சென்று வருவதை மட்டுமே எளிதாக்குகிறது.
அத்துடன், பெலியத்தவிலிருந்து 06 கி.மீ தொலைவில் உள்ள பெடிகம பரிமாற்றமும் முரண்பாடுகளைக் கொண்டது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு பரிமாற்றத்தை நிர்மாணிக்க ரூ.10 மில்லியனுக்கும் அதிகமான தொகை செலவிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 17 மணி நேரம் முன்

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
