மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! பொலிஸ் அதிகாரிகளுக்கு சவாலாக மாற்றியுள்ள இரு பெண்கள்
இரு பெண் சந்தேகநபர்களை கைது செய்வற்காக உதவுமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடகவெல, கலஹிடிய, பெலவத்த வீதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்குச் சென்ற அடையாளம் தெரியாத பெண் ஒருவர், 28.03.2024 அன்று, அதன் உரிமையாளருக்குச் சொந்தமான ரூபா 110,000, மதிப்புள்ள 02 தங்க மோதிரங்களைத் திருடிச் சென்றுள்ளார்.
திருட்டு சம்பவங்கள்
இது தொடர்பில், ரக்வானை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த புகாரின் அடிப்படையில் ரக்வானை பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

இதற்கமைய, பொலிஸாரின் விசாரணையில், சந்தேகநபரான இந்த பெண், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊதுபத்திகள் மற்றும் பிற பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் சென்று இதுபோன்ற திருட்டுகளைச் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதேவேளை, 2024.03.28 அன்று, ரக்வானை பன்சாரா வீதியில் வசிக்கும் பெண் ஒருவரின் ஏ.டி.எம் அட்டையை அவரது வீட்டில் தங்கியிருந்த பெண்ணொருவர் திருடி, அதைப் பயன்படுத்தி ரூபாய் 420,000 பணம் பெற்றுள்ளதாகவும் மற்றும் மதிப்புமிக்க பொருட்களையும் திருடிச் சென்றதாகவும் தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் உரிமையாளரான பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், ரக்வானை பொலிஸ் நிலையம் விசாரணைகளை தொடங்கியுள்ளது.

மேற்கண்ட சந்தேக நபர் வசிக்கும் பகுதியை விட்டு அப்பெண் தப்பிச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது, மேலும் சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.
தேடப்படும் சந்தேக நபரின் விபரங்கள்
1. பெயர்:-இத்தகொடகே அப்சரா நிலுஷிகிகா பெரேரா
2. முகவரி:128, ஸ்ரீ விக்ரம ராஜசிங்க மாவத்தை, குரானா, நீர்கொழும்பு
3. வயது: 42
4. அடையாள அட்டை இலக்கம்: 836982568v
எனவே இந்த படத்தில் உள்ள, இவ்விரு பெண் சந்தேக நபர்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் இவ்வாறான நபர்கள் குறித்து மக்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொலைபேசி எண்கள்:-
ரக்வானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 071-8591394
ரக்வானை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு ஓஐசி - 071 - 8593808
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri