அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பாரியளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நெடுஞ்சாலைகளில் பண்டிகைக் காலத்தில் சுமார் ஒன்றரை முதல் இரண்டு லட்சம் வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விடயத்தை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பீ. சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து நெரிசல்
அதிவேக நெடுஞ்சாலைகளில் நாளொன்றில் ஒரு லட்சம் முதல் ஒரு லட்சத்து பத்தாயிரம் வாகனங்கள் சராசரியாக போக்குவரத்தில் ஈடுபடும் என அவர் குறிபிப்பட்டுள்ளார்.
பண்டிகைக் காலத்தில் இந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என அவர் எதிர்வுகூறியுள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு நத்தார் பண்டிகைக் காலத்தில் 145000 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் எதிர்வரும் 16, 17ம் திகதிகளில் கொழும்பு நோக்கி அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் பயணிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 23 மணி நேரம் முன்

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
