தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரியுள்ளனர்.
2024 டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட மார்~ல் லோ ( இராணுவச்சட்டம்) காரணமாக கலவரம் ஏற்பட்டதாக கூறியே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை மாற்ற முயற்சி
இந்த அறிவிப்பு, நாடாளுமன்றத்தை மற்றும் மக்களை மாற்ற முயற்சி எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த முயற்சி சில மணி நேரத்தில் திரும்பப்பெறப்பட்டாலும், அரசமைப்பு மற்றும் ஜனநாயகச் சட்டத்தை அது பாதித்தது என சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அரசு அதிகாரத்தை மீறி அரசமைப்பு ஒழுங்கை அழிக்கும் முயற்சியில் அவர் இதன் மூலம் ஈடுபட்டுள்ளார்.எனவே அவருக்கு சட்டப்படி வழங்கக்கூடிய மிகக் கடும் தண்டனை, மரண தண்டனையாகும் என்று சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் யூன், ஜனநாயகத்தை காக்கவே தாம் முயற்சித்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை 2026 பெப்ரவரி மாதம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் 1997 முதல் யாருக்கும் மரண தண்டனை நடைமுறைபடுத்தப்படவில்லை. அதனால், முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனையை நாடினாலும் அது ஆயுள் தண்டனையாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.