நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரிய தென்கொரிய ஜனாதிபதி
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல், நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்
இரண்டு நாட்களுக்கு முன்னர், இராணுவச் சட்டத்தை நாட்டில் நடைமுறைப்படுத்தி, பின்னர் அதனை விலக்கிக்கொண்ட நிலையிலேயே அவர், நாட்டு மக்களிடம் மன்னிப்பை கோரியுள்ளார்.
அவசரகால இராணுவச் சட்டப் பிரகடனம், பொறுப்பான கட்சி என்ற எனது விரக்தியிலிருந்து உருவானது என்று யூன் இரண்டு நிமிட உரை ஒன்றில் கூறியுள்ளார்.
குற்றப்பிரேரணை வாக்கெடுப்பு
எனினும், தென்கொரிய குடிமக்களுக்கு, தமது நடவடிக்கை, கவலை மற்றும் சிரமத்தை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தமது செயலால், பெரும் அதிர்ச்சிக்குள்ளான, குடிமக்களுக்காக வருந்துகிறேன் மற்றும் உண்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எது எப்படியிருப்பினும், இந்த வார இறுதியில் ஜனாதிபதி, நாடாளுமன்றத்தில், குற்றப்பிரேரணை வாக்கெடுப்பை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்காமையை அடுத்தே, தென்கொரிய ஜனாதிபதி, நாட்டில் இராணுவ சட்டத்தை நடைமுறைபடுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
