பாகிஸ்தானில் சட்டமறுப்பு இயக்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ள இம்ரான் கான்

Pakistan Imran Khan World
By Sivaa Mayuri Dec 07, 2024 01:00 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

பாகிஸ்தானில் (Pakistan) சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அடுத்த வாரம் எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்துமாறு தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், சட்டமறுப்பு இயக்கத்தை ஆரம்பிக்கப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். அவருடைய கட்சி, பாரிய போராட்டம் ஒன்றை நடத்திய சில நாட்களுக்குப் பின்னர் இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

தமது எக்ஸ் தளத்தில் இடுகை ஒன்றை பதிவிட்டுள்ள இம்ரான் கான், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெசாவரில், 2024 டிசம்பர் 13ஆம் திகதி அன்று ஒன்று கூடுமாறு ஆதரவாளர்களைக் கேட்டுள்ளார்.

ஜனாதிபதி கதிரைக்கு மதுபான அனுமதிப்பத்திர இலஞ்சம்: ரணில் தரப்பு வழங்கவுள்ள பதில்

ஜனாதிபதி கதிரைக்கு மதுபான அனுமதிப்பத்திர இலஞ்சம்: ரணில் தரப்பு வழங்கவுள்ள பதில்

இரண்டு கோரிக்கைகள் 

2024 நவம்பர் 25ஆம் திகதி எதிர்ப்பு ஊர்வலத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு நீதி விசாரணை வேண்டும் என்று அவர் தமது பதிவில் கோரியுள்ளார்.

பாகிஸ்தானில் சட்டமறுப்பு இயக்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ள இம்ரான் கான் | Imran Khan Calls Civil Disobedience In Pakistan

அத்துடன், பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள தமது அரசியல் ஆதரவாளர்களும் விடுவிக்கப்பட வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படா விட்டால், டிசம்பர் 14ஆம் திகதி முதல் கீழ்ப்படியாமை இயக்கம் ஆரம்பிக்கப்படும்.

இந்தநிலையில், இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கான் எச்சரித்துள்ளார்.

மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

இடம்பெற்ற போராட்டம் 

இதேவேளை, நவம்பர் 25ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது, தமது ஆதரவாளர்களில் குறைந்தது 12 ஆதரவாளர்கள் கொல்லப்பட்டதாகவும், கடந்த ஆண்டு மே 9ஆம் திகதி அன்று வன்முறையில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் சட்டமறுப்பு இயக்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ள இம்ரான் கான் | Imran Khan Calls Civil Disobedience In Pakistan

எனினும், நவம்பர் 25 எதிர்ப்பின் போது, எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அரசாங்கம் மறுக்கிறது, மேலும் கானின் ஆதரவாளர்கள் கடந்த ஆண்டு மே 9ஆம் திகதி அன்று இராணுவ தளங்களைத் தாக்கியதாகவும் அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து சிறைப்படுத்தப்பட்டுள்ள 72 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானுக்கு எதிராக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி தரப்பால் அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

ஐக்கிய மக்கள் சக்தி தரப்பால் அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US