வெளிநாட்டில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்
தென் கொரியாவின் தலைநகரான சியோலில் இடம்பெற்ற ஹெலோவீன் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 27 வயதுடைய இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றவர் அல்ல எனவும், கல்விக்காக வெளிநாடு சென்றவர் எனவும் வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தென்கொரியாவிலுள்ள இலங்கை தூதரகத்திலிருந்து தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, உயிரிழந்தவர் அகதி வீசாவில் நாட்டில் தங்கியிருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி, உடத்தலவின்ன, மடிகே பகுதியைச் சேர்ந்த மொஹமட் ஜினாத் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தென் கொரியாவில் 2 வருடங்களாக வசித்து வந்த இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கு வந்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணம் செய்து கொண்டதை அடுத்து ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அவர் மீண்டும் தென் கொரியாவுக்கு திரும்பியுள்ளார்.
இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்
இந்நிலையில், நேற்று ஹெலோவீன் கொண்டாட்டம் இடம்பெற்ற போது அவ்வழியாக வேலைக்கு சென்ற நிலையில் வீதியில் இருந்த வடிகானொன்றில் சிக்கி பின்னர் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவத்தில் மேலுமொரு இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய சியோலில் உள்ள பொலிஸார் மற்றும் வைத்தியசாலைகளுக்கு அதிகாரிகளை அனுப்பியுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, வௌிவிவகார அமைச்சு மற்றும் தென் கொரியாவிற்கான இலங்கை தூதரகம் ஊடாக மேலதிக தகவல்கள் திரட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்து பணிக்காக வெளியேறிய சுமார் 23,000 இலங்கைப் பணியாளர்கள் தென்கொரியாவில் தங்கியுள்ளனர்.
இந்த விபத்தினால் அவர்களில் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தாம் உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, உயிரிழந்த இளைஞனின் உறவினர்களை வெளிவிவகார அமைச்சுக்கு வரவழைத்து தேவையான ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
