தென்கொரியாவில் நெரிசலில் சிக்கி 146 பேர் உயிரிழப்பு - பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 146 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 150 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலாம் இணைப்பு
தென்கொரியாவின் சியோலில் இன்றிரவு Halloween கொண்டாட்டங்களுக்காக 100,000 க்கும் மேற்பட்டோர் குவிந்தபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களில் சுமார் 81 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள நிலையில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நிலைமையை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தென்கொரியாவின் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு, முதல் முறையாக முகக் கவசம் அணிவது கட்டாயம் அல்லாத வெளிப்புறத்தில் அனுமதிக்கப்பட்ட ஹாலோவீன் கூட்டம் இது என்பதால் இதில் சுமார் 10 ஆயிரம் பேர் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், மக்கள் விரைவாக வீடு திரும்ப வேண்டும் என்ற அவசரகால செய்தியொன்று யோங்சான் மாவட்டத்தில் உள்ள அனைவரின் தொலைபேசிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.