உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பில் திடீர் அறிக்கை வெளியிட்ட நாடு
உக்ரைனுக்கு எத்தகைய அழிவு ஆயுதங்களையும் தென் கொரியா வழங்கவில்லை என்று அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றின் ஊடாக இன்று(17.07.2023) குறித்த விடயத்தை தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போரில் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் நிதி மற்றும் இராணுவ உதவிகளை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல்(Yoon Suk-yeol) போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
எந்தவொரு மாற்றமும் இல்லை
இதன்போது உக்ரைனுக்கான பாதுகாப்பு, மனிதாபிமான மற்றும் மறுகட்டமைப்பு உதவி ஆகியவற்றுக்கு தென் கொரியா வழங்கும் உதவிகளை அதிகரிக்க ஜனாதிபதி ஒத்துக்கொண்டார்.
இந்நிலையில் உக்ரைனுக்கு தென் கொரியா மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க ஒப்புக்கொண்டதே தவிர, அழிவு ஆயுதங்களை வழங்குவது தொடர்பான எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இதற்கிடையில் தென் கொரியாவின் நிலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை, அதேசமயம் அழிவு ஆயுதங்கள் எதையும் தென் கொரியா வழங்காது என்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜியோன் ஹா-கியூ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
