முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதம் நீக்கம்: பாராட்டு தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குவதற்கான சட்டம் வரவேற்க கூடியதாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதம்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி,மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு பணியில் இருக்கும் வரை வரப்பிரதாசங்கள் வழங்குவதே தகுந்த நடைமுறையாகும்.
முதலில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு என்ன வேண்டும் என தீர்மானம் எடுக்கனும். ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு அத்தியாவசியமானதாகும்.அதற்கு பாதுகாப்பு கவுன்சிலில் பேச்சுவார்த்தை நடத்தி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் தனது பதவி காலம் முடிவடைந்து பின்னர் 5 ஆவது லேனிலுள்ள தனது வீட்டுக்கு சென்றார்.அதேபோல் மற்றைய முன்னாள் ஜனாதிபதிகளும் தங்களின் சொந்த வீடுகளில் குடியேறியிருக்கலாம்.
பாராட்டும் ஐக்கிய தேசியக் கட்சி
அப்படி செய்திருந்தால் இன்று இந்த பிரச்சினை இல்லை.முன்னாள் ஜனாதிபதிகள் சிலர் முன்னுதாரணமாக செயற்பட முடியும் என்றால் ஏன் ஏனையோருக்கு முடியவில்லை என்ற வினா எழுப்பப்படுகிறது.
இது சட்டமாக்கப்பட்டது நல்ல விடயமாகும்.மேலும் யுத்தத்தில் சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு அரசியமாகும்.அது அரசாங்கத்தின் பொறுப்பாகும். நாம் ஏனைய நாடுகளின் தலைவர்களை பார்த்துள்ளோம்.
ஜப்பானில் ஜனாதிபதி மற்றும் பிரதமர்கள் சாதாரண புகையிரதத்தில், பேருந்துகளில் பயணிப்பதை நான் கண்டுள்ளேன்.ஏன் நாம் அந்த நிலைக்கு செல்ல முடியாது.ஆதலால் அரசாங்கம் எடுத்த இந்து முடிவை நான் பாராட்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
