தென்கொரியாவில் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து : பலர் பலி
தென்கொரியாவில் லித்தியம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்கொரிய நாட்டின் ஜியோங்கி மாகாணம் ஹவாஸ்சோங் நகரில் லித்தியம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த தொழிற்சாலையில் 67 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனைடுத்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.
இருப்பினும் 20 தொழிலாளர்கள் தீ விபத்தில் உயிரிழந்துள்ளதுடன் அவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மேலும் 23 தொழிலாளர்கள் நிலைமை தொடர்பில் தகவல் வெளிவராத காரணத்தினால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri