தேசிய மே தின பேரணியை சிறப்பிக்க இலங்கை வந்த தென்னிந்திய பாடகர்கள்
அரசாங்கத்தினால் நாளை (01) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய மே தின பேரணியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் பாடுவதற்காக இந்தியாவிலிருந்து பாடகர்கள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
குறித்த குழுவானது இன்று (30.04.2024) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக பிரபல பாடகர்களான விஜய் பாலகிருஷ்ணன், ரம்யா NSK, டேனியல் ஜெயராம், ரேஷ்மா ஷ்யாம் உள்ளிட்ட பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்.
இசை நிகழ்ச்சி
இக்குழுவினர் இன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-122 மூலம் இந்தியாவின் சென்னையில் இருந்து 11.40 மணியளவில் புறப்பட்டு பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அதிகாரிகள் இக்குழுவினரை வரவேற்றுள்ளனர்.
இந்த இசை நிகழ்ச்சியானது நாளை கொழும்பு மாளிகாவத்தை P.D சிறிசேன விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் நாளை (01) சத்யா பிரகாஷ் தர்மர் மற்றும் வர்ஷா போன்ற இந்திய இசைக்கலைஞர்களும் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இலங்கைக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam
