தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: ஒருவர் படுகாயம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ பகுதியில் லொறி ஒன்று மற்றுமொரு பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளனதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களனிகம போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நோக்கிச் சென்ற பாரவூர்தி ஒன்றுடன் பின்னால் வந்த குறித்த லொறி மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணை
இதற்கமைய விபத்து இடம்பெற்று உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அவசர மீட்பு அதிகாரிகள், லொறியில் சிக்கியிருந்த சாரதியை மீட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மெலும், லொறி பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும் காயமடைந்த சாரதியின் கவனயீனத்தினால் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்னர்.
இந்நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகளை கலானிகம போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan