தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூடு: எட்டு பேர் பலி
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்டதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவின் கிகெபெர்ஹா நகரில் இடம்பெற்ற பிறந்தநாள் வீடு ஒன்றில் இடம்பெற்ற விருந்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் இந்த துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

உலகின் மிகவும் அதிகமான துப்பாக்கி குற்றங்கள்
கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்கள் அடையாளம் காணப்படவில்லை. என்றாலும் வீட்டின் உரிமையாளரும் கொல்லப்பட்டவர்களில் அடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் உலகின் மிகவும் அதிகமான துப்பாக்கி குற்றங்கள் இடம்பெறுகின்றன.
எனினும் பொதுமக்கள் மீதான துப்பாக்கி பிரயோகங்கள் அரிதாகவே இடம்பெறுகின்றன.
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan