ஈரானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்! போர் களம் தீவிரமானதற்கான காரணம் வெளியானது
ஈரானின் தலைவர்,''அலி கமேனியை இனி உயிருடன் இருக்க அனுமதிக்க முடியாது.''என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் மற்றும் இஸ்ரேலின் உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் வைத்தியசாலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த, ஈரானிய தலைவர் கமேனி, தனிப்பட்ட முறையில் உத்தரவிடுவதாகவும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இஸ்ரேல் மீதான, ஈரானிய ஏவுகணைத் தாக்குதலின் போது சொரோகா வைத்தியசாலை (Soroka hospital) தாக்கப்பட்ட பின்னரே அவர் இந்த அறிக்கையை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் விளக்கம்
இந்நிலையில், ''இஸ்ரேலின் இராணுவத் தளத்தையே நாங்கள் குறிவைத்தோம். இஸ்ரேல் வைத்தியசாலையை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தவில்லை'' என ஈரான் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து ஈரானின் அரச ஊடகமான ஐ.ஆர்.என்.ஏ (IRNA)வெளியிட்டுள்ள செய்தியில், “இஸ்ரேலில் இன்று நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் எங்கள் இலக்கு இஸ்ரேல் இராணுவத் தளம் மற்றும் உளவுப் பிரிவு தளம் மட்டுமே ஆகும். அவை கவ்-யாம் தொழில்நுட்பப் பூங்காவில் உள்ளன.
இஸ்ரேலின் கண்டனம்
அந்த பூங்காவுக்கு அருகில் சொரோகா வைத்தியசாலை உள்ளது. நாங்கள் நடத்திய தாக்குதலின் அதிர்வலைகளால் ஏற்பட்ட பாதிப்புதான் வைத்தியசாலையில் உணரப்பட்டதே தவிர, எங்களின் இலக்கு வைத்தியசாலை அல்ல” என்று தெரிவித்துள்ளது.

ஈரான் - இஸ்ரேல் மோதலின் 7-வது நாளான இன்று காலை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் சொரோகா வைத்தியசாலை சேதமடைந்ததுடன் 89 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொரோகா வைத்தியசாலை தாக்குதலுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்- அமல்
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri