விரைவில் மக்களின் அரசாங்கம் உருவாகும்! மனோ கணேசன்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான, ஸ்ரீலங்கா மக்களின் அரசாங்கம் விரைவில் உருவாகுமென, அந்தக் கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
உரிமைகளை பாதுகாக்கின்ற அனைத்து மக்களுக்குமான ஜனநாயகமிக்க அரசாங்கம் விரைவில் உருவாகுமென்பதை உறுதியாக வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
”ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் - மனித சுதந்திரத்தைப் பாதுகாத்திடு” எனும் தொனிப்பொருளில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி, சிவில் சமூக அமைப்புகள், ஐக்கிய இளைஞர் சக்தி, மற்றும் ஐக்கிய மகளிர் சக்தி என்பன ஒன்றினைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.