இலங்கையின் தற்போதைய நிலை கவலையளிக்கிறது! சோனியா காந்தி
இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு உதவுமாறு சர்வதேசத்தை இந்திய காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொள்கிறது என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நிலை தொடர்பில் கவலை
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து காங்கிரஸ் கட்சி கவலையடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார சவால்கள், விலைவாசி உயர்வு மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவை இலங்கை மக்களுக்கு பெரும் சிரமத்தையும் துன்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த பாரதூரமான நெருக்கடியில் இலங்கையுடனும் அதன் மக்களுடனும் காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக நிற்கிறது மற்றும் அவர்களால் அதை சமாளிக்க முடியும் என்று நம்புகிறது.
தற்போதைய சிரமங்களை கையாள்வதில் இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று சோனியா காந்தி கூறினார்.
இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்குமாறு அவர் சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.