தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன்
அனுராதபுரம், மதவாச்சி பகுதியிலுள்ள வீடொன்றில் மூத்த மகனின் தாக்குதலுக்கு உள்ளான தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடவத்கம பகுதியில் மூத்த மகனுடன் வாழ்ந்து வந்த தந்தை நேற்று கொடூரமாக தாக்கி கொலை செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அருகிலுள்ள வீட்டில் வசிக்கும் இரண்டாவது மகன் தந்தை காண வீட்டுக்கு வந்த நிலையில் அவர் இரத்த காயங்களுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட நபர்
இது குறித்து உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தலைமையிலான குழுவினர் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளமையை உறுதி செய்துள்ளனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் தனது மூத்த மகனுடன் மது அருந்தியுள்ளர்.
இதன்போது மகனுடனான வாக்குவாதத்தைத் தொடர்ந்து அவரை தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட நபர் மதவாச்சி, கடவத்கமவில் வசிக்கும் 67 வயதுடையவராகும்.
சந்தேக நபரான 42 வயதுடைய மூத்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது நடந்து வரும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam