மாமனாரையும் மாமியாரையும் கோடரியால் வெட்டிய மருமகன் கைது
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேசத்தில் மாமனாரையும் மாமியாரையும் கோடரியால் வெட்டிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான மருமகனை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி – மீராவோடை பகுதியிலே நேற்றிரவு(30) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மருமகனின் தாக்குதலுக்குள்ளான 62 வயதுடைய மாமனார் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் மாமியார் தொடர்ந்தும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை
நீதிமன்றில் முன்னிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
