தந்தையை கொலை செய்து ஆவணங்களை கொள்ளையிட்ட மகன் கைது
பலாங்கொட பகுதியில் தந்தையை கொலை செய்து ஆவணங்களை திருடிய குற்றச்சாட்டில் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாங்கொட, ஹந்தகிரியவை பகுதியை சேர்ந்த 70 வயதுடைய நபரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
சம்பவ இடத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். அதற்கமைய கொல்லப்பட்டவர் தனது வீட்டில் படுக்கையில் உயிரிழந்து கிடந்ததாகவும், வீட்டிலிருந்து ஆவணங்கள் திருடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சகோதரியின் வீட்டிற்கு வந்த நபர், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு வீட்டிலிருந்து ஆவணங்களைத் திருடியதாகவும், சந்தேக நபர் உயிரிழந்தவரின் மகன் எனவும் பெண் ஒருவர் வெலிகெபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 40 வயதான மகனை கைது செய்துள்ளனர்.
சடலம் பலாங்கொட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெலிகெபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri