சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் வசமாக சிக்கினார்
களுத்துறை மாவட்டம், இங்கிரிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது 7.5 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரன விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, இங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 20 ஏக்கர் பிரதேசத்தை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டு இங்கிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 3 மணி நேரம் முன்
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan