பர்தா அணிந்ததால் வெளிவராத உயர்தரப் பெறுபேறுகள்: அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடு
திருகோணமலை (Trincomalee) ஸாஹிரா கல்லூரியின் 70இற்கும் மேற்பட்ட மாணவிகள் பரீட்சையின் போது பர்தா அணிந்ததால் அவர்களின் உயர்தரப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு இன்றையதினம் (15.06.2024) பெறுபேறுகள் வெளிவராத மாணவிகளால் அளிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைகளத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக காதுகளை மறைத்து பர்தா அணிந்து பரீட்சை எழுத முடியாத நிலையில், இம்மாணவிகள் அவ்வாறு பரீட்சைகள் எழுதியதால் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உரிய தீர்வு
இதனால் தாம் எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலைமை குறித்து ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவந்த மாணவிகள், தமக்கு உரிய தீர்வை பெற்றுதர நடவடிக்கைகைள எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி உரிய தீர்வை பெற்றுத்தருவதாக மாணவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
