எரிபொருள் நிலையத்தில் குழப்பம்: பொலிஸாரை தாக்கிய இளைஞர்கள் (Video)
திருகோணமலையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற இளைஞர்கள் சிலர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவமொன்று இன்று(25) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை - கந்தளாய் எரிபொருள் நிலையமொன்றில் எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற இளைஞர்கள் சிலர் குடிபோதையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு பொலிஸார் ஒருவரையும் தாக்க முயன்றுள்ளனர்.
தாக்குதல்
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் - 91ம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் பெருந்திரளான பொதுமக்கள் எரிபொருளுக்காக காத்து கொண்டிருந்துள்ளனர்.
இந்த நிலையில் சில இளைஞர்கள் முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கொண்டு அத்துமீறி நுழைந்து எரிபொருள் பெருவதற்கு முயற்சித்துள்ளனர்.
பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து அவர்களை இனங்கண்டு தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர்.
அந்த இளைஞர்கள் பொலிஸாரின் கடமைக்கு இடையூறுகள் ஏற்படுத்தியதோடு, பொலிஸார் ஒருவரையும் தாக்க முயன்றுள்ளனர்.
பொலிஸாரின் நடவடிக்கை
எரிபொருள் நிலையத்தில் சில மணி நேரம் அமைதியின்மை ஏற்பட்டதோடு மேலதிக பொலிஸாரும், இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் குடிபோதையில் இடையூறு ஏற்படுத்திய நபர்கள் தப்பி சென்றுள்ளார்கள்.
பின்பு வழமை போன்று எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.