ஒட்டுசுட்டானில் வீசிய கடும் காற்றினால் வீடு சேதம் (Video)
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்தையன் கட்டு கிராம அலுவலகர் பிரிவில் ஜீவநகர் மாதிரி கிராமத்தில் கடும் காற்றினால் வீடு சேதமடைந்துள்ளது.
இந்த அனர்த்தமானது நேற்றைய தினம் (20.04.2023) இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சேதங்கள்
மழை பெய்த போது வீசிய கடும் காற்றினால் வீட்டின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த 7 சீற்கள் தூக்கி வீசப்பட்டுள்ளன.
சேதமடைந்த வீடானது, மூன்று அங்கத்தவர்களை கொண்ட குடும்பத்திற்கு அரசாங்கம் வழங்கிய வீட்டுத்திட்டத்திற்கான நிதி முழுமையாக கிடைக்காத நிலையில் நிறுவனம் ஒன்றின் நிதி உதவியில் கட்டிக்கொடுக்கப்பட்டது என தெரியவருகிறது.
பொது மக்கள்
தற்காலிக கொட்டிலொன்றும் காற்றினால் சேதமடைந்துள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.











விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
