சில மருத்துவர்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதில்லை
நாட்டில் சில மருத்துவர்களும் சுகாதார நடைமுறைகளை உதாசீனம் செய்து வருவதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பளார் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன(Asela Gunawardena) தெரிவித்துள்ளார்.
சிரேஸ்ட மருத்துவ அதிகாரிகள், மருத்துவர்கள் போன்றவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் பாதுகாப்பு வழிமுறைகள், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத நிலையை அவதானிக்க முடிவதாகவும் இது துரதிஸ்டவசமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார துறையைச் சேர்ந்தவர்கள் கோவிட் வழிகாட்டகல்களை பின்பற்றாமை பொதுமக்கள் மத்தியில் பிழையான பிம்பத்தை உருவாக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சில மருத்துவர்கள், சிரேஸ்ட சுகாதார அதிகாரிகள் முகக் கவசம் இன்றி புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வறான மருத்துவர்களே சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றவில்லை என்பதனால் நாம் ஏன் பின்பற்ற வேண்டுமென மக்கள் நினைக்கக் கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர்கள் போன்ற மரியாதைக்கு உரியவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டியது அவசியமானது என டொக்டர் ஹேமந்த ஹேரத்(Hemantha Herath) தெரிவித்துள்ளார்.



