அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் மனித உடலால் உணரப்படும் வெப்பம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளுக்கு வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் (23.08.2026) வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் நாளைய தினம் (24.08.2026) பி.ப 4 மணி வரை செல்லுபடியாகும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எச்சரிக்கை அறிவித்தல்
இதற்கமைய, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அப்பகுதிகளின் சில இடங்களில் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அல்லது வெப்பச் சுட்டெண் அவதானம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகப் பொதுமக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறும், வெப்பமான வானிலை நிலைமையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
