உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகள்
நாட்டில் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட மற்றும் கொடகவெல ஆகிய பகுதிகளின் சில இடங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், எஹலியகொட பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மின்னான, விலேகொட, யக்குதாகொட, அஸ்காகுல்ல -வடக்கு, போபத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கொடகவெல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இறக்குவானை நகரம், இறக்குவானை - வடக்கு, இறக்குவானை - தெற்கு, மசுமுல்ல, கொட்டலை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் உனடடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதிகளில், கொவிட் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டதனாலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam