தீர்வுக்கான பேச்சு விரைவில் ஆரம்பம்: பிரதமர் தினேஷ் அறிவிப்பு
தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் விரைவில் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய பிரச்சினைகள் தொடர ஒருபோதும் இடமளிக்க முடியாது.

இன பிரச்சினை
குறுகிய காலத்துக்குள் இந்த பிரச்சினை தொடர்பில் உரிய தீர்வுகளைக் காண வேண்டும்.
இந்த நிலையில் தேசிய பிரச்சினைகள் நீடித்தால் இன, மத நல்லிணக்கம் ஏற்படாது.
நாட்டில் ஏதோவொரு வகையில் இன ரீதியிலும், மத ரீதியிலும் கருத்து மோதல்கள் உருவாகின்றன.

மக்களிடத்தில் ஏற்படவுள்ள பிளவுகள்
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் பிளவுகளை ஏற்படுத்திக் குளிர்காய சிலர் முற்படுகின்றனர்.
தீர்வு விடயம் தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுடன் அரசாங்கம்
விரைவில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளார்.
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri