அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு! - பிரதமர் வழங்கிய உறுதி
அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் முரண்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதி தீர்மானம் எட்டப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதி வழங்கியுள்ளார்.
பிரதமருக்கும், ஆசிரிய அதிபர் தொழிற்சங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று பிரதமர் அலுவலகத்தில் இடம் பெற்றது. இப்பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
ஆசிரியர்- அதிபர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும். இதற்கமைய திங்கட்கிழமை முதல் அனைவரும் சேவையில் ஈடுப்பட தயாராக வேண்டும் என பிரதமர் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டார்.
ஆசிரியர் - அதிபர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைக்கு தீர்வு மற்றும் ஆசிரியர் - அதிபர் சேவையினை கட்டாய சேவையாக்கும் கோரிக்கை ஆகியவற்றிற்கு எதிர்வரும் திங்கட்கிழமை இடம் பெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்த இறுதி தீர்வு வழங்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
