புதிய அரசமைப்பின் ஊடாகவே தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்: அநுரகுமார திஸாநாயக்க
தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாகத் தீர்வை வழங்க முடியாது. அனைத்தின மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய புதிய அரசமைப்பின் ஊடாகவே தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைப் பெற முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
'தமிழர்களின் பிரச்சினைகளுக்கு 13ஆவது திருத்தத்தின் ஊடாகவும், மாகாண சபைகளின் ஊடாகவும் தீர்வைப் பெற முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?' என ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பிய போது அவர் இந்த பதிலை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், "இருக்கின்ற அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாகவோ அதில் அதிகாரத்தைக் கூட்டியோ அல்லது குறைத்தோ தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க முடியாது.
தமிழர்களுக்கான தீர்வு
அனைத்தின மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய புதிய அரசமைப்பின் ஊடாகவே நிலையான தீர்வைப் பெற முடியும்.
தெற்கு மக்கள் நிராகரிக்கும் தீர்வு ஒருபோதும் தமிழர்களுக்கான தீர்வாக அமையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.
தற்போதைய அரசால் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு வழங்க
முடியாது. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தமிழர்களுக்குத் தீர்வு கிடைத்தே
தீரும் என தெரிவித்துள்ளார்.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
