எரிபொருள் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு: அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
நாடு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் எரிபொருள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த மாத இறுதியில் சீனாவில் இருந்து டீசல் கப்பல் ஒன்று நாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அபுதாபியில் இடம்பெறும் வலுசக்தி மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
மேலும் தெரிவிக்கையில்,இலங்கை கடந்த 10 மாதங்களில் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருந்தது.
இதனால், வலுசக்தி துறை பாரிய வீழ்ச்சியையும் நெருக்கடியையும் சந்தித்திருந்தது.
அதனூடாக வாய்ப்புகள் உருவானதுடன்,தனியார் விநியோகத்தர்கள் இந்த துறைக்கு வருவதற்கான சட்டம் மற்றும் கொள்கைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இதேவேளை 2030ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 70 சதவீதம் வரையில் வளர்ச்சியடையும் என வலுசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.