கிளிநொச்சியில் படையினர் ஆக்கிரமித்துள்ள காணிகள் குறித்து சிறீதரன் விடுத்துள்ள கோரிக்கை!
கிளிநொச்சி நகரில் நாற்பது வீத்த்திற்கும் அதிகமான காணிகளை படையினர் தொடர்ந்தும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றனர் இவற்றை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இன்று (16-07-2025) நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகின்ற போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
காணி விவகாரம்
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,''மாவட்டத்தில் நீண்ட காலமாக மக்கள் பயன்படுத்திய, பயிர் செய்து வந்த ஏராளமான காணிகள் படையினரின் கட்டுப்பாட்டிலும் வனவள திணைக்கத்தினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆனைவிழுந்தான் குளத்தின் கீழான வயல் காணிகள் பள்ளிக்குடா போன்ற பகுதிகளில் அங்கே மக்கள் பயிர்செய்கை மேற்கொண்டதற்கான கட்டுமானங்கள் இருக்கின்றன.
கிளிநொச்சி நகரத்தில் உள்ள நாற்பது வீதமான காணிகள் முழுக்க முழுக்க படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.
யாரும் போராடவில்லை
யுத்தம் நிறைவுபெற்று 14 ஆண்டுகள் கடந்துள்ளன. யாரும் ஆயுதம் தூக்கவில்லை, யாரும் போராடவில்லை ஆனால் இராணுவம் இவ்வாறு காணிகளை ஆக்கிரமித்து வைத்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டி உள்ளார்.
குறிப்பாக கிளிநொச்சி மகா வித்தியால மைதானத்திற்கு செல்லும் பாதை மற்றும் மகா வித்தியாலயத்துக்குரிய காணி பிரதேச சபைக்கான நூலக காணி தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் காணி இவ்வாறு பெருந்தொகையான காணிகளை நகரத்தின் மையப்பகுதிகளில் இராணுவத்தினர் வைத்துள்ளனர். இதனால் அபிவிருத்தியோ அல்லது நல்லிணக்கமோ நடைபெறாது.'' என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கடத்தொழில் அமைச்சர் பாடசாலைக்குரிய காணி மற்றும் பாதைகளை திறந்துவிடுவது தொடர்பில் பாதுகாப்பு அமைசுடன் பேசி அதற்கான தீர்வு எட்டப்படும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 20 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
