மன்னாரில் கடமையில் இருந்த இராணுவ வீரருக்கு நேர்ந்த அவலம்!
மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் இருந்த இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கி தவறுதலாக வெடித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் இன்று (22.6.2026) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்த இராணுவ வீரர் மன்னார் சௌத்பார் இராணுவ முகாமில் கடமையாற்றும் ஜெயதிலக்க (வயது- 46) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த இராணுவ வீரர் மன்னார் பிரதான பாலத்தடி யில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த தோடு,அங்கு கடமையில் உள்ள இராணுவ வீரர்களுக்கு பொறுப்பாக இருந்து கடமைக்கான துப்பாக்கிகளை விநியோகித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது இராணுவ வீரர்களுக்கு துப்பாக்கிகளை பரிசோதித்து விநியோகிக்க முற்பட்ட போதே குறித்த துப்பாக்கி இயங்கிய நிலையில் அவர் காயமடைந்த நிலையில் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்து இராணுவ வீரரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan