கந்தளாயில் தொடருந்தில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் பலி
கந்தளாய், வென்ராசன்புர பகுதியில் தொடருந்தில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (04.04.2026) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் வென்ராசன்புர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஐ.ஆர். அசங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எரிபொருள் விநியோகம்: QR குறியீடு மற்றும் ஒற்றை - இரட்டை இலக்க முறை குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு
தொடருந்தில் மோதிய நபர்
தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த இவர் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்தில் மோதியுள்ளார்.

வென்ராசன்புரயில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு தண்டவாளம் வழியாக அவர் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்துக்கு விரைந்த கந்தளாய் குற்றப் புலனாய்வு துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மீட்கப்பட்ட விமானி அமெரிக்காவிற்கு அனுப்பிய 3 வார்த்தைச் செய்தி! மலைகளில் 48 மணி நேர போராட்டம் - துல்லியமாக செயற்பட்ட CIA